ஜமாஅதுல் முஸ்லிமீன் ஓர் அறிமுகம்

அல்லாஹ்வையும் அவனது தூதர் முஹம்மத் (ஸல் ) அவர்களையும் நம்பும் ஒவ்வொரு மனிதனும் தற்காலத்தில் காணப்படும் இயக்கங்கள் , தரீகாக்கள், மத்ஹபுகள் போன்றவற்றை கைவிடுவதோடு தாம் இருக்கும் தவறான கொள்கை கோட்பாடுகளை புரந்தள்ளி சரியானதும் , தெளிவானதுமான மாரக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் .

காரணம் ; அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாம் ஒன்றாகவே முன்வைக்கப்பட்டது. அப்போது பிரிவுகள், இயக்கங்கள் , தரீகாக்கள், மத்ஹபுகள் இன்று போல் அன்று இருக்கவில்லை .

மேலும் கீழ்வரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வார்த்தைகள் சத்தியத்தை தேடும் நல்ல நெஞ்சங்களுக்கு வழி காட்டியாக இருக்கிறது. ''வேதத்தையுடைய மக்கள் (யூதர்களும், கிறிஸ்தவர்களும்) 72 பிரிவுகளாக பிரிந்தனர். எனது இந்த உம்மத் 73 பிரிவுகளாக பிரிவார்கள். அதில் 72 நரகம்.ஒரு கூட்டம் சுவனம் (செல்லும்). அது அல்ஜமாஅத் ஆகும்." (அபூதாவூத் - 4599)

அல் ஜமாஅத்தை பின்பற்றி அல்லாஹ்வின் தண்டனையிலிருந்தும் நரகிலிருந்தும் தன்னை விடுவித்து சுவனப் பாதையில் பயணிப்பது ஒவ்வொரு விசுவாசியினதும் கட்டாயக் கடமையாகும்.

இப்பொழுது அல்குர்ஆன் , ஹதீஸ் ஒளியில் அந்த அல்ஜமாஅத் பற்றி ஆய்வு செய்வோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகின்றான் :
(அல்குர்ஆனாகிய) இதிலும் இதற்கு முன்னரும் அவன் உங்களுக்கு முஸ்லிம்கள் என பெயரிட்டான.
(சூரா அல்ஹஜ் 22:78)

சகல நம்பிக்கையாளர்களும் தங்களை முஸ்லிம்கள் என்றே அழைக்க வேண்டும் .இன்று காணப்படுவது போன்று பிரிவுகள, இயக்கங்கள், தரீகாக்கள் , மத்ஹபுகள் போன்ற பெயரால் அழைக்க கூடாது.

சுவனம் செல்லும் அல்ஜமாஅத்தின் மேலதிமான விடயங்களை ஆய்ந்தறிவது எம் ஒவ்வொருவரினதும் தார்மீகப் பொறுப்பாகும். அல்லாஹ்வின் அருளால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த அல்ஜமாஅத்தை அல்லாஹ் வைத்த முஸ்லிம்கள் என்ற பெயருடன் இப்படி அடையாளப்படுத்தினார்கள்.

ஜமாஅதுல் முஸ்லிமீனையும் அதனது இமாமையும் பற்றிப்பிடிப்பீராக! அனைத்து பிரிவுகளையும் விட்டு ஒதுங்கி விடுவீராக !
(ஸஹீஹுல் புகாரி -3606)

ஒரு விசுவாசியின் உள்ளம் 3 விடயங்களி துரோகம் செய்யாது.
01. செயல்களை அல்லாஹ்வுக்கென தூய்மையாக்குதல்
02. தலைவர்களுக்கு கட்டுப்படுதல்
03.ஜமாஅத்துல் முஸ்லிமீனோடு இணைந்திருத்தல்
(முஸ்தத்ரக் ஹாகிம் - 294)

எவர் ஜமாஅத்துல் முஸ்லிமீனுக்கு ஒரு சாண் மாறு செய்கிறாரோ அவர் இஸ்லாத்தின் வளையத்தை தன் கழுத்திலிருந்து களைந்து விட்டார்.
(முஸ்தத்ரக் ஹாகிம் - 402)

ஆகவே அந்த அல்ஜமாஅத் தான் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்றும் பிரிவுகளை விட்டு ஒதுங்கி அதில் தான் இணைய வேண்டும் என்றும் ஒரு முஃமினான உள்ளம் இதனை ஏற்றுக் கொள்ளும் என்றும் இதற்கு மாறாக நடப்பது இஸ்லாத்தின் வளையத்தை களைவதற்கு சமம் என்றும் தெளிவாகிறது.

எனவே அல்குர்ஆனிளிருந்தும் ஸஹீஹான ஹதஸ்களிலிருந்தும் நாம் முன்வைக்கும் தூய்மையான இஸ்லாத்தை பின்பற்ற வருமாறு அனைவரையும் அழைகிறோம். ஜமாஅத்துல் முஸ்லிமீனைப் பற்றி ஏதாவது கேள்விகள் இருப்பின் தாராளமாக தொடர்பு கொள்ளலாம். info@jamaathulmuslimeen.com